USEFUL LINKS

He who dwells in the shelter of the Most High, who abides in the shadow of the Almighty, will say to the Lord, “My refuge and my fortress; my God, in whom I trust.”

Psalm 91:1-2

புனித சூசையப்பருக்கு செபம்(1900 ஆண்டுகள் பழமையானது)

புனித சூசையப்பரே! உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது.
வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது.
எனவே  என் ஆசைகளையும், எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கிறேன்.

உம் வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும்  எங்கள் ஆண்டவருமாகிய சேசுவிடம் எங்களுக்குத் தேவையான  எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும்.  இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி  எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும்,  ஆராதனையும் செலுத்தக் கடவேன்.

புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில்  உறங்கும் சேசுவையும் சதா காலமும் எண்ணி  பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன்  உம்மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில்  அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.  உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும்.  என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும்.  நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும்.  மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும். - ஆமென்.