தூய ஆவியார் நவநாள் செபம்

பரிசுத்த ஆவி பாடல்:

ஓ பரிசுத்த ஆவியே! என் ஆன்மாவின் ஆன்மாவே

உம்மை ஆராதனை செய்கிறேன் இறைவா ஆராதனை செய்கிறேன்

என்னை ஒளிரச் செய்து வழி காட்டும் புது வலுவுட்டி என்னைத் தேற்றும்

என் கடமை என்னவென்றுக் காட்டும் அதைக் கருத்தாய் புரிந்திடத் தூண்டும்

என்ன நேர்ந்தாலும் நன்றித் துதி பாடிப் பணிவேன் என் இறைவா

உந்தன் திருவுள்ளப்படி என்னை நடத்தும் –ஓ பரிசுத்த

சுருக்கமான உத்தம மனஸ்தாப ஜெபம்:

 என் சர்வேசுரா சுவாமி ! தேவரீர் அளவில்லாத சகல நன்மையையும் அன்பும் நிறைந்தவராய் இருப்பதனால் ,என் பாவங்களால் உமக்கு செய்த துரோகத்துக்காக உத்தம மனஸ்தாபப்படுகிறேன் . இனி உமது வரப்பிரசாதத்தின் உதவியால் இப்பேர்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான பிரதிக்கனை செய்கிறேன் . - ஆமென் .


தொடக்க செபம்:

முத: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே…

எல்: ஆமென்.

முத: தூய ஆவியே, எங்கள் ஆருயிரே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். எங்களில் ஒளியேற்றி எங்களை வழி நடத்தியருளும். எங்களுக்குத் திடம் அளித்து எங்களைத் தேற்றியருளும். நாங்கள் செய்ய வேண்டியவற்றை எங்களுக்குச் சொல்லி ஆணையிடும். உமது திட்டத்தை எங்களுக்குத் தெரியப்படுத்தினால் போதும். எப்படி நாங்கள் நடக்க வேண்டுமென்று நீர் விரும்புவதை நாங்கள் அன்புடன் ஏற்று அடிபணிகிறோம்.

எல்: ஆமென்.


தூய ஆவியாரால் நிரப்பப்படச் செபம்:

‘நீங்கள் மனம் மாறுங்கள், உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெருவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். (திருத்தூதர் பணிகள் 2:38) என்பது புனித பேதுருவின் அறிவுரை. எனவே தூய ஆவியார் நம்மில் நிரம்ப வேண்டுமெனில் நாம்:

1. நம் பாவங்களுக்காக மனத்துயரடைய வேண்டும்.

2. இயேசு கிறிஸ்துவை நம் ஒரே மீட்பராக ஏற்க வேண்டும்.

3. தூய ஆவியார் நம்மை நிரப்ப உருக்கமாகக் கெஞ்சி மன்றாட வேண்டும்

(இந்த செபத்தை தினமும் 20 நிமிடங்கள் மீண்டும் மீண்டும் மனப்பற்றுதலுடன் தூய ஆவியாரை நோக்கி செபிக்கவும்)

எல்: என்றும் வாழும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே, எங்கள் அன்பு இயேசுவே, நீர் வாக்களித்த தூய ஆவியாரை எங்கள் மீது அனுப்பியருளும். உம் தூய ஆவியாரின் கனிகளையும், கொடைகளையும், அருங்கொடைகளையும் எங்களுக்கு அருளி எங்களைப் புதிய படைப்பாக மாற்றியருளும். இயேசுவே, உமக்கு நன்றி! இயேசுவே உமக்குப் புகழ்! விண்ணுலகத் தந்தையே, எங்கள் மீது உம் தூய ஆவியாரைப் பொழிந்தருளும். நன்றி தந்தையே, என்றும் புகழ் உமக்கே. ஆமென்.

முத: மூவொரு இறைவா, உம்மைத் ஆராதிக்கிறோம்.

எல்: அனைத்திற்கும் முழு முதல் பொருள் நீரே.

முத: இறைவா, உம்மை விசுவசிக்கிறோம்.

எல்: என்றும் மாறாத நிலையான உண்மை நீரே.

முத: இறைவா, உம்மை நம்புகிறோம்.

எல்: எல்லையற்ற இரக்கமும், நிறை ஆற்றலும் கொண்டவர் நீரே.

முத: இறைவா உம்மை அன்பு செய்கிறோம்.

எல்: அளவற்ற நன்மையும் அன்பும் கொண்டவர் நீரே.

முத: அன்புத் தந்தையே, உம் தூய ஆவியாரை அனுப்பியருளும்.

எல்: அவர் எங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவராக.

முத: இனிய இயேசுவே, உம் தூய ஆவியாரை அனுப்பியருளும்.

எல்: அனைத்திலும் நாங்கள் இறைவனை மாட்சிப்படுத்துவோமாக.

(கீழுள்ள செபத்தை ஏழு முறை சொல்லவும் )

முத: பரிசுத்த ஆவியே, தேவரீர் எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளுடய இருதயங்களை நிரப்பும். அவைகளில் உம்முடைய சிநேக அக்கினியை மூட்டியருளும்.

எல்: உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும். அதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர். ஆமென்.

முத: செபிப்போமாக! எல்லாம் வல்ல இறைவா! உம் மக்களின் உள்ளங்களைத் தூய ஆவியின் ஒளியால் தெளிவுப்படுத்தினீரே. அந்தத் தூய ஆவியின் ஒளியால் நாங்கள் சரியானவற்றை உணரவும், அவருடைய ஆறுதலால் மகிழ்ச்சி பெறவும் அருள்புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

விசுவாசப்பிரமானம்…

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் தூய ஆவியால் கருவுற்று, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகிறேன். புனித கத்தோலிக்கத் திருஅவையை நம்புகிறேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகிறேன். பாவ மன்னிப்பை நம்புகிறேன். உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்.

நிலைவாழ்வை நம்புகிறேன். -ஆமென்.

பரலோகத்திலிருக்கின்ற…

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக/ எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும் எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். -ஆமென்


(முதல் மூன்று மணியில் மூன்று முறை)

பரம பிதாவே பரிசுத்த ஆவியை எங்களுக்கு அனுப்பியருளும்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மன்டசி உண்டாவதாக !

தொடக்கத்திலே இருந்தது போல இபபொழுதும் எபபொழுதும் என்றென்றும் இருப்பதாக ! ஆமென் .


1. அர்ச்சிக்கும் தேவனாகிய பரிசுத்த ஆவி நம்மைப் புனிதத்தில், பரிசுத்தத்தனத்தில் உணர்ச்சியுறும்படி செய்யும் நன்மைக்கு நன்றி கூறுவோம்.

(பெரிய மணியில்)

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக/ எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும் எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். -ஆமென்

(சிறிய மணிகளில்)

பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். 

உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மன்டசி உண்டாவதாக !தொடக்கத்திலே இருந்தது போல இபபொழுதும் எபபொழுதும் என்றென்றும் இருப்பதாக ! ஆமென் .

2. உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம். அவள் உன் தலையை நசுக்குவாள் என்ற தீர்க்கதரிசனத்தை நிறைவேறச் செய்ததற்கு நன்றி செலுத்துவோம்

(பெரிய மணியில்)

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக/ எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும் எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். -ஆமென்

(சிறிய மணிகளில்)

பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும்.

 உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மன்டசி உண்டாவதாக !தொடக்கத்திலே இருந்தது போல இபபொழுதும் எபபொழுதும் என்றென்றும் இருப்பதாக ! ஆமென் .

3. வார்த்தை மனுவுருவாகி மீட்புப் பணியை நிறைவேற்றியதற்கு நன்றி செலுத்துவோம்.

(பெரிய மணியில்)

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக/ எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும் எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். -ஆமென்

(சிறிய மணிகளில்)

பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். 

உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மன்டசி உண்டாவதாக !தொடக்கத்திலே இருந்தது போல இபபொழுதும் எபபொழுதும் என்றென்றும் இருப்பதாக ! ஆமென் .

4. பரிசுத்த ஆவி, தேவமாதாவின் பேரிலும், அப்போஸ்தலர்கள் பேரிலும் இறங்கியதற்கு நன்றி செலுத்துவோம்.

(பெரிய மணியில்)

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக/ எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும் எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். -ஆமென்

(சிறிய மணிகளில்)

பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். 

உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும். தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மன்டசி உண்டாவதாக ! தொடக்கத்திலே இருந்தது போல இபபொழுதும் எபபொழுதும் என்றென்றும் இருப்பதாக ! ஆமென் .

5. பரிசுத்த திருச்சபையை விசுவாசத்திலும், பரம அன்பிலும் வழிநடத்திச் செல்வதற்கு நன்றி செலுத்துவோம்.

(பெரிய மணியில்)

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக/ எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும் எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். -ஆமென்

(சிறிய மணிகளில்)

பரிசுத்த ஆவியே எழுந்தருளி வாரும். 

உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மன்டசி உண்டாவதாக !தொடக்கத்திலே இருந்தது போல இபபொழுதும் எபபொழுதும் என்றென்றும் இருப்பதாக ! ஆமென் .

ஜெபிப்போமாக.

சர்வேசுரா சுவாமி, விசுவாசிகளுடய இருதயங்களை பரிசுத்த ஆவியின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே, அந்த பரிசுத்த ஆவியினால் நாங்கள் சரியானவைகளை உணரவும், அவருடைய ஆறுதலால் எப்போதும் மகிழ்ந்திருக்கவும் எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவின் வழியாக. 

ஆமென்.

தூய ஆவியின் புகழ்மாலை:

முத: ஆண்டவரே இரக்கமாயிரும்…எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்.

முத: கிறிஸ்துவே இரக்கமாயிரும்…எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்.

முத: ஆண்டவரே இரக்கமாயிரும்…எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்.

முத: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்

எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும்

முத: விண்ணகத் தந்தையாகிய இறைவா…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: உலகை மீட்ட திருமகனாகிய இறைவா…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: தூய ஆவியாகிய இறைவா…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: மூவொரு கடவுளாகிய இறைவா…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: தந்தைக்கும் மகனுக்கும் இணையான தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: தந்தையாகிய இறைவன் வாக்களித்த தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: விண்ணக ஒளியின் கதிரான தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: எல்லா நன்மைகளுக்கும் தொடக்கமாகிய தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: விண்ணகத் தண்ணீரின் ஊற்றாகிய தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: சுட்டெரிக்கும் தீயாகிய தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: பற்றி எரியும் அன்பாகிய தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: இறைப்பொழிவாகிய தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: உண்மையும் அன்பும் கொண்ட தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: ஞானமும் புரிந்துணர்வும் தரும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: ஆலோசனையும் மனவலிமையும் தரும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: அறிவும் இறை பக்தியும் தரும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: தேவ பயம் தரும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: அருளும் செபமும் தரும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: தூய்மையையும், மாண்பையும் அருளும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: ஆறுதல் அளிக்கும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: தூய்மைப்படுத்துகிறவராகிய தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: திரு அவையை வழிநடத்தும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: உன்னதக் கடவுளின் திருக்கொடையாகிய தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: உலகனைத்தையும் நிரப்பும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: எங்களை இறை மக்களாக மாற்றும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: பாவத்தின்மீது அச்சத்தையும் வெறுப்பையும் உண்டாக்கும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: உலகின் முகத்தைப் புதுப்பிக்கும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: எங்கள் ஆன்மாவில் ஒளி ஏற்றும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: எங்கள் இதயங்களில் உம் சட்டத்தைப் பொறிக்கும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: எங்கள் உள்ளங்களை உம் அன்புத் தீயால் ஒளிர்விக்கும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: சரியாகச் செபிக்கக் கற்றுத்தரும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: விண்ணகத் தூண்டுதல்களால் எங்களை ஊக்குவிக்கும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: மீட்பின் வழியில் எங்களை வழிநடுத்தும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: அவசியமான அறிவை மட்டும் தரும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: வாழ்வு தரும் தண்ணீராகிய தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: நீதியில் எம்மை நிலைத்திருக்கச் செய்யும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: எங்களுக்காகப் பரிந்துரைக்கும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: எங்களுக்கு நல்லவற்றை கற்பிக்கும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: எங்களுக்கு எல்லா நற்பண்புகளை வழங்கும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: எங்களுக்கு நீதியை நிலைநாட்டும் தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: எங்களது நிலையான நித்தியக் கொடையான தூய ஆவியாரே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…எல்: எங்கள் பாவங்களைப் மன்னித்தருளும்.

முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: தூய ஆவியே எம்மில் எழுந்தருளி வாரும்! உம்முடைய இறைமக்களின் உள்ளங்களை நிரப்பியருளும். உம் அன்புத் தீயால் எங்களின் உள்ளத்தைப் பற்றி எரியச் செய்தருளும்.

எல்: உம்முடைய ஞானக்கதிர்களை வரவிடுவீர். அதனால் உலகைப் புதுப்பிப்பீர்.

முத: செபிப்போமாக! எங்கள் அடைக்கலமும் ஆறுதலுமாகிய இறைவா, உம்முடைய ஆவியால் எங்களை வழிநடத்துகின்றீர். உமது அருட்காவலில் நாங்கள் உயிர்வாழச் செய்கிறீர். எம்மீது இரங்கி, எங்கள் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும். உம்மையே நம்பியிருக்கும் எங்கள் விசுவாசம் மேன்மேலும் உறுதி பெருமாறு உம்முடைய ஆவியின் அருட்கொடைகளை எங்களுக்கு நிறைவாய்த் தந்து உதவியருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.

முதல் நாள்:

தூய ஆவியின் தூய்மை அடைந்தோம் . 

வாசகம் : அப் . பணி 19 : 1-8 

அப்பொல்லோ கொரிந்தில் இருந்தபோது பவுல் மலைப்பாங்கான பகுதி வழியாக எபேசு வந்தார். அங்கு அவர் சில சீடர்களைக் கண்டு, அவர்களை நோக்கி, "நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் கொள்ளப்பட்டீர்களா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்று கூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே" என்றார்கள். "அவ்வாறெனில் நீங்கள் எந்தத் திருமுழுக்கைப் பெற்றீர்கள்?" எனப் பவுல் கேட்க, அவர்கள், "நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப் பெற்றோம்" என்றார்கள். அப்பொழுது பவுல், "யோவான் மனம் மாறிய மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, தமக்குப் பின் வரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுமாறு கூறினார்" என்றார். இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றனர். பவுல் அவர்கள் மீது கைகளை வைத்ததும், தூய ஆவி அவர்கள் மேல் இறங்கியது. அப்பொழுது அவர்கள் பரவசப்பேச்சு பேசினர்; இறைவாக்கும் உரைத்தனர். அங்கு ஏறக்குறைய பன்னிரண்டு பேர் இருந்தனர். பின்பு பவுல் தொழுகைக்கூடம் சென்றார். அங்கு அவர் மூன்று மாதங்கள் இறையாட்சிபற்றித் துணிவுடன் மக்களோடு பேசி அவர்களோடு விவாதித்து அவர்களை நம்பச் செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

நாம் ஒவ்வொருவரும் திருமுழுக்குப் பெற்ற தூய போது ஆவியார் நம்மீது இறங்கி , நமது ஆன்மாவை தம் இருப்பிடமாகக் கொண்ட நாளாகும் . அன்று முதல் தூய ஆவியார் - தனிமையில் வேலை செய்யும் ஒரு கலைத்திறமை  வாய்ந்த ஓவியர்போல் நம் உள்ளத்தின் அமைதியில் இறைப்பணி ஆற்றுகின்றார் . தக்க முறையில் நாம் பெறும் ஒவ்வொரு திருவருட்சாதனமும் ,  தூய ஆவியார் நம்மீது பொழியும் அவரது அருளேயாகும் . ஒவ்வொருநாளும் , ஒவ்வொரு நிமிடமும் அவர் தம் அருளால் ஒளி நம் ஆன்மாவில் இன்று சுடர் விட்டு நம்மை பேணிக்காக்கிறார் . திருமுழுக்கின்போது நாம் பெற்ற தூய ஆவியாரின் ஒளிர்கின்றதா ? சாவான பாவத்தால் அவ் வொளியை அணைத்துவிட்டோமா ? சிறு குற்றங் குறைகளால் அவரது ஒளியை மங்கவிடுகின்றோமா சிந்தித்துப் பார்ப்போம்

இரண்டாம் நாள்:

 நீங்களே இறைவனின் ஆலயம் . 

வாசகம் : 1 கொரி . 3 : 10-17 

கடவுள் எனக்கு அளித்த அருளின்படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது. அந்த அடித்தளத்தின்மேல் ஒருவர் பொன், வெள்ளி, விலையுயர்ந்த கற்கள், மரம், புல், வைக்கோல் ஆகியவற்றுள் எதையும் வைத்துக் கட்டலாம். ஆனால், அவரவருடைய வேலைப்பாடு தெரிந்துவிடும்; தீர்ப்பு நாள் அதைத் தெளிவுப்படுத்தும். அந்நாள் நெருப்பு மயமாய் வெளிப்படும். அந்நெருப்பு அவரவருடைய வேலை எத்தகையது என்பதைக் காட்டும். ஒருவர் கட்டியது நிலைத்து நின்றால் அதற்கான கூலியை அவர் பெறுவார். ஒருவர் கட்டியது தீக்கிரையாகுமானால் அவர் இழப்புக்குள்ளாவார். ஆனால் நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவர்போல் அவர் மீட்கப்படுவார். நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

உலகிலேயே பெருங்கொடுமை நிறைந்த தீமை பாவம் என்பதை உணர்வோம் . தூய ஆவியாரின் ஒளி நம் ஆன்மாவில் மங்காதிருக்க " ஆபத்தை நேசிக்கிறவன் அதிலேயே அழிவான் " ( சீராக் 3 : 27 ) என்று தூய ஆவியார் கூறியிருப்பதை மனதில் இருத்தி , பாவத்திற்குக் காரணமாயிருக்கும் சந்தர்ப்பங்களையும் , இடங்களையும் , ஆட்களையும் விட்டு விலக தீர்மானிப்போமாக .

மூன்றாம் நாள்:

 இறைவாக்கு உயிருள்ளது ; ஆற்றல் மிக்கது . 

வாசகம் : எபி . 4:12 - 16 

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.  படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும். எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் . பக்தி அல்லது இறைப்பற்று உடையோரின் ஆன்ம அழகு அவர்கள் முகத்தில் மட்டுமல்ல ; நடையுடை பாவனையிலும் பளிச்சிடக் காணலாம் ; ஆனால் சிலரோ அவர்கள் சொல்வதின் எதிர்பதமே உண்மை என்று எண்ணும் அளவில் சூதும் சூழ்ச்சியும் நிறைந்தவர்களாயுள்ளனர் . தூய வாழ்க்கையை மேற்கொள்ளவும் , தூய வாழ்வில் பீடுநடை போடவும் , தூய ஆவியார் எழுதி நமக்குத் தந்தருளிய ' வானகத் தந்தையின் மடல்களாகிய ' ( 13.ஆம் சிங்கராயர் ) விவிலியத்தை இறைப்பற்றுடன் வாசிப்போம் , சிந்திப்போம் ; செயல்படுவோம் .

நான்காம் நாள்:

 இறையரசை முதலில் தேடுங்கள் . 

வாசகம் : மத் . 6 : 25-33 

ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா? ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

உன் இதயத்தின் நாட்டம் யாது ? உன் இதயம் எங்கே ? " உங்கள் செல்வம் எங்குள்ளதோ , அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும் ” . உன் அவா யாது உன் எண்ணங்கள் உயர்ந்தவையா ? தாழ்ந்தவையா ? நீ இறைவனின் சுதந்திரக் குழந்தையா ? உலகின் , ஆசாபாசங்களின் அடிமையா ? உண்மை அறிவுக்காக தூய ஆவியாரிடம் செபிப்போம் . " ஆண்டவரே , உம்மிலன்றி என் ஆன்மா இளைப்பாற்றியைக் காண இயலாது " என்றார் புனித அகுஸ்தினார் . நாம் நம் அன்புத் தந்தையாம் இறைவனின் திரு வுளத்தை அறிந்து , நம் வாழ்க்கைப்படகை நல்வழியில் .பல செலுத்திட , தினமும் ஒவ்வொரு செயலுக்கு முன் தவறா வரம் தரும் தூய ஆவியாரின் அருளை வேண்டுவோம் .

 ஐந்தாம் நாள்:

தூய ஆவியின் கனிகள் . 

வாசகம் : கலா . 5 : 16-26

எனவே நான் சொல்கிறேன்; தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள். ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நிங்கள் செய்ய விரும்பவதை உங்களால் செய்ய முடிவதில்லை. நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள். ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன். ஆனால் தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள். தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம். வீண் பெருமையைத் தேடாமலும், ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாமலும், ஒருவர்மீது ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக! நம் ஆன்ம வாழ்வில் கடினமான பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சூழப்பட்டு சிக்கிக் கொண்டு நமக்கு தூய ஆவியாரின் அருள் தேவை . நாம் தவிக்கிறோம் . அவற்றில் நாம் வெற்றி கண்டிட , பாவத்தை விலக்கிட ஆவல் கொள்கிறோம் . ஆனால் போதுமான பலமில்லை . நாம் நல்ல தீர்மானங்களைச் செய்கிறோம் . ஆனால் முழு மூச்சுடன் முயல்வதில்லை . எனவே பிறவிப்பாவத்தின் விளைவாகிய மனித பலவீனத்தை வென்றிட , நமக்கு தூய ஆவியின் அருட்கொடைகள் தேவை . எல்லா வற்றிற்கும் மேலாக , கடைசி மட்டும் நிலை நிற்கும் பெரும் அருளை தூய ஆவியாரிடமிருந்து கேட்போம் .

 ஆறாம் நாள்:

நம் ஆன்மா தூய ஆவியின் ஆலயம். 

வாசகம் : திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 9b-11, 16-17 

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கடவுள் எழுப்பும் கட்டடம். கடவுள் எனக்கு அளித்த அருளின் படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது. நீங்கள் கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

இறைவனின் முன்னிலையில் நம் வாழ்க்கையை நடத்தும் பழக்கத்தை நாம் மேற்கொள்ளவேண்டும் . அவ்வப்பொழுது நம் மனத்தை இறைவன்பால் எழுப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் .நம் வெளி வேலைகளிலேயே நாம் மெய் மறந்திராது , அவைகளுக்கு அடிமைகளாகிவிடாது நினைவுடன் முன்னிலையில் ( with recollection ) இறைவன் இறைவனுக்காகவே வாழ வேண்டும் . நம் ஆன்மா தூய ஆவியாரின் ஆலயம் என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வோம் .

ஏழாம் நாள்:

கேளுங்கள் கொடுக்கப்படும் . 

வாசகம் : லூக் . 11 : 5-13 

மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்; "உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, "நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை" என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், "எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு ப+ட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது" என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். "மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி! "

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

கதிரவன் உலகெங்கும் ஒளி வீசுகிறான் . ஆனால் குருடன் அதைப் பார்ப்பதில்லை ; அதன் ஒளியால் பயன் அடைவதில்லை . " நானே உலகின் ஒளி " என்று  இயேசு கூறியுள்ளார் . ஆனால் அநேகர் அவ் வொளியைக் காண்பதில்லை . அவ்வொளியைக் காணும் அனைவரும் முழுமையாகப் பயனடைய வில்லை . தேடுங்கள் கண்டடைவீர்கள் " என்று இயேசு இறைவனை அறிந்தால் மட்டும் போதாது , அவரின் கூறியிருக்கிறார் . ஒளியின் மக்களாய் நாம் வாழ , திருவுளத்தையும் அறிந்து நம் நல்வாழ்வால் அவரை அன்பு செய்தல் வேண்டும் . உலகப்பற்றைத் துறந்து , இறைப்பற்றை அடைய தூய ஆவியின் அருள் நமக்குத் தேவை .


எட்டாம் நாள்:

விண்ணுலகில் செல்வம் சேர்த்து வையுங்கள் 

வாசகம் லூக் .  6 : 9-24

இயேசு அவர்களை நோக்கி, "உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?" என்று கேட்டார். பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, "உமது கையை நீட்டும்!" என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர். அந்நாள்களில் அவர் வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார். அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான் பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.  இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள். அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.

 இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை; "ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர். 

ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

இறையரசையும் , இரை றைப்புகழையும் வைப்பதுதான் ' ஞானம் ' எனும் தூய ஆவியின் கொடையாகும் . எளிமையும் , தாழ்ச்சியும் ஞானம் எனும் அருட்கொடையின் இரண்டு இறக்கை களாகும் . இறை வழிகளைக் கண்டுபிடிப்பது , அவற்றை விரும்புவது இக்கொடையின் பயன்களாகும் .

 ஒன்பதாம் நாள் :

இயேசுவின் தாய் மரியாளோடு அப்போஸ்தலர்கள் செபத்தில் ஈடுபட்டு இருந்தார்கள் . 

வாசகம் : அப் . பணி . 1 : 6-14 

பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், "ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" என்றார். இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, "கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்" என்றனர். பின்பு அவர்கள் ஒலிவமலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் உள்ளது. பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி

தூய ஆவியாரின் அருளால் , மரியாள் இயேசுவின் தாய் ஆனாள் . ' பரிசுத்த ஆவி உம்மீது வருவார் . பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும் ' ( லூக் . 1:35 ) என வா வானதூத உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும் . ஆதலின் அறிவித்தார் . இறையன்பு தூய ஆவியாரின் சிறப்பு வேலையாகக் குறிப்பிடப்படுகின்றது . கன்னிமரியாளின் - ஆன்மா , தூய ஆவியாரின் சிறந்த ஆலயமாகத் திகழ்கின்றது . தூய ஆவியாரின் பத்தினியாக கன்னிமரியாள் விவரிக்கப்படுகிறாள் .

உன்னத சங்கீதத்தில் , தூய ஆவியார் மரியாளை வெண் புறாவே ' என்றழைக்கிறார் . அவரே புறாவின் வடிவில் இறங்கினார் . கன்னிமரியாளின் தலைமையில் இயேசுவின் தொண்டர்கள் தூய ஆ வியாரின் வருகைக்காக தயார் செய்தனர் . இதுவே , திருச்சபை வரலாற்றிலேயே முதல் நவநாள் ஆகும் .


தூய ஆவியார் செபம்

(இரு குழுக்களாக மாறி மாறி பாடலாம்)

தூய ஆவியே எழுந்தருள்வீர்.

வானினின்று எமது பேரொளியின்,

அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்.

நன்கொடை வள்ளலே வந்தருள்வீர்.

இருதய ஒளியே வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,

ஆன்ம இனிய விருந்தினரே,

இனிய தண்மையும் தருபவரே,

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,

வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,

அழுகையில் ஆறுதலானவரே,

உன்னத பேரின்ப ஒளியே,

உம்மை விசுவசிப்போருடைய

நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்

உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை.

நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.

வறட்சியுற்றதை நனைத்திடுவீர்.

காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்.

குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்.

தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா, உம்மை விசுவசித்து,

உம்மை நம்பும் அடியார்க்குக்

கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்கள் வழங்கிடுவீர்.

இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்.

அழிவிலா இன்பம் அருள்வீரே. ஆமென்

தூய ஆவியார் நவநாள் செபம்:

(ஒன்பது நாள்களும் சொல்ல வேண்டும்)

ஓ தூய ஆவியாரே! எங்கள் இறைவா! நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உமது தெய்வீகத்தன்மையின்றி நாங்கள் ஒன்றுமில்லாதவர்கள், நீரின்றி எங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்;. வாரும் தேற்றரவாளரே, எளியோரின் தந்தையே, சிறந்த ஆறுதலளிப்பவரே, எங்களை அநாதைகளை விட்டு விடாத எங்கள் மீட்பரான இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதியை நிறைவேற்றுவீராக. பெந்தக்கோஸ்தே நாளன்று அன்னை மரியா மீதும், திருத்தூதர்கள் மீதும் இறங்கி வந்ததைப் போல, உமது தகுதியற்ற படைப்பாகிய ஏழைகள் எங்கள் மீதும் இறங்கி, எங்கள் உள்ளத்தையும் இதயத்தையும் நிரப்புவீராக. மிக அற்புதமாகவும், மிகுந்த இரக்கத்தோடும், தாராள மனத்தோடும் நீர் அன்று அவர்களுக்கு வழங்கிய அதே கொடைகளை இன்று எங்களுக்கும் வழங்குவீராக. உமக்கு வருத்தமளிக்கும் செயல்கள் அனைத்தையும் எங்கள் இதயத்திலிருந்து எடுத்துவிட்டு, அதை உமக்குத் தகுந்த உறைவிடமாக மாற்றுவீராக. நித்திய பேறுபலன்களை நாங்கள் காணவும், புரிந்து கொள்ளவும் எங்கள் மனதை ஒளிரச் செய்வீராக. எல்லாவற்றிற்கும் மேலாக எங்களிடமுள்ள தகுதியற்ற பிணைப்புகளைக் அகற்றி, எங்கள் இதயத்தை உம் அன்பால் பற்றி எரியச் செய்து, எங்கள் வாழ்நாள் முழுவதும் எங்கள் ஆண்டவராகிய இயேசுவில் மறைந்திருக்கச் செய்வீராக. இறைவனின் திருவுளத்தின்படி நாங்கள் நடந்து, தூய ஆவியாரின் துண்டுதலால் வழிநடத்தப்பட எங்கள் சிந்தையை திடப்படுத்துவீராக. இயேசு கிறிஸ்து தமது மண்ணுலக வாழ்வில் கடைப்பிடித்துக் கற்றுக்கொடுத்த தாழ்ச்சி, வறுமை, கீழ்ப்படிதல், இவ்வுலக அலட்சியம் ஆகிய தெய்வீகப் படிப்பினைகளை நாங்களும் கடைப்பிடிக்க உமது அருளினால் எங்களுக்கு உதவுவீராக.

ஓ ஆறுதலளிக்கும் தூய ஆவியாரே! மிகுந்த நம்பிக்கையுடன் எங்கள் கடமைகளை நிறைவேற்றவும், எங்களது அன்றாடச் சிலுவைகளை நாங்கள் பொறுமையுடன் சுமக்கவும், இறைவனின் திருவுளத்தை நாங்கள் முழுமையாக நிறைவேற்றவும், வானத்தைத் திறந்து வெண்புறாவாக எங்கள் மேல் இறங்கி வருவீராக. அன்பின் ஆவியாரே! தூய்மையின் ஆவியாரே! அமைதியின் ஆவியாரே! என் ஆன்மாவை மேன்மேலும் தூய்மையாக்கும். இந்த உலகம் தர முடியாத அந்த விண்ணக அமைதியை எங்களுக்குத் தருவீராக. உமது இறையரசு இந்த உலகெங்கும் பரவிட அயராது உழைக்கும் எங்கள் திருஅவையையும், எங்கள் திருத்தந்தையையும், ஆயர்களையும், திருப்பணியாளர்களையும், துறவறத்தார் அனைவரையும், இறை மக்கள் அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பி ஆசீர்வதியும்.

ஓ தூய ஆவியாரே! எல்லா நல்லவற்றையும் முழுமையாக அளிப்பவரே! இந்த நவநாள் வழியாக நான் வேண்டும் அனைத்தையும் அருள்வீராக. என்னிலும், என் வழியாகவும் உமது திருவுளம் நிறைவேறுவதாக. நீர் என்றென்றும் புகழப்படவும் மாட்சிப்படவும் தகுந்தவர். ஆமென்.


ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்:

(ஒன்பது நாள்களும் சொல்ல வேண்டும்)

விண்ணகத் தந்தையோடும் அவரது திரு மகனாம் இயேசு கிறிஸ்துவோடும் உறவாடும் தூய ஆவியாரே! விண்ணகச் சாட்சிகளின் பெருங்கூட்டத்திற்கு முன் முழந்தாள்படியிட்டு, என்னையும், என் ஆன்மாவையும், என் உடலையும் அர்ப்பணிக்கிறேன். உமது தூய்மையின் பிரகாசத்தையும், உமது தவறாத நீதியின் திறமையையும், உமது அன்பின் வலிமையையும் நான் போற்றிப் புகழ்கிறேன். என் ஆன்மாவின் வல்லமையும் ஒளியும் நீரே. நான் இருப்பதும் இயங்குவதும் வாழ்வதும் உம்மாலே தான். என் அவநம்பிக்கையினாலும் என் அற்பப் பாவங்களினாலும் உம்மை நான் ஒருபோதும் துயரத்துக்குள்ளாக்காமலிருக்க என் முழு உள்ளத்தோடு உம்மை நோக்கி மன்றாடுகிறேன். என் ஒவ்வொரு சிந்தனைகளையும் இரக்கத்துடன் காத்து, உமது ஒளியைக் காணவும், உமது குரலைக் கேட்கவும், உமது இரக்கமுள்ள ஊக்கங்களைப் பின்பற்ற தயை புரியும். நான் உம்மை என்றும் பற்றிக் கொண்டு, என் பலவீனத்திலே என்னைக் காக்கும்படி என்னை உமக்களிக்கிறேன். இயேசுவின் துளையுண்ட கால்களைப் பிடித்து, அவருடைய ஐந்து திருக் காயங்களையும் பார்த்து, அவருடைய திரு இரத்தத்தில் நம்பிக்கை கொண்டு, குத்தித் திறக்கப்பட்ட விலாவையும் இதயத்தையும் வணங்கி, ஆராதனைக்குரிய ஆவியாரே, என் பலவீனத்தின் உதவியாளரே, நான் என்றும் உமக்கு எதிராகப் பாவம் செய்யாதவாறு, உம் அருளினால் என்னைக் காத்தருளும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் தூய ஆவியாரே, ‘ஆண்டவரே பேசும். உம் அடியான் கேட்கிறேன்” என்று நான் எங்கும் எப்பொழுதும் சொல்ல உமதருளைப் பொழிந்தருளும். ஆமென்.

ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்:

(ஒன்பது நாள்களும் சொல்ல வேண்டும்)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, விண்ணகத்திற்குச் செல்லும் முன் உமது திருத்தூதர்கள் மற்றும் சீடர்களின் ஆன்மாக்களின் வேலைகளை நிறைவேற்ற தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களித்தீரே. உமது இரக்கத்தின் அன்பின் வேலைகளை எங்கள் ஆன்மாக்களில் முழுமையாக்க, அதே தூய ஆவியாரை எங்களுக்கும் தந்தருளும். அழிந்து போகும் இவ்வுலகச் செல்வங்கள் மீது பற்று கொள்ளமல், நிலைவாழ்வை அளிக்கும் உன்னதச் செல்வத்தின் மீது ஆசை கொள்ள உமது ஞானத்தின் ஆவியைப் பொழிந்தருளும். உமது தெய்வீக உண்மையின் ஒளியால் எங்களது மனதை விழிப்பூட்ட உமது புரிந்துணர்வின் ஆவியைப் பொழிந்தருளும். கடவுளை மட்டும் மகிழ்வித்து விண்ணகத்தை அடையும் வழியைத் தேர்ந்தெடுக்க உமது ஆலோசனையின் ஆவியைப் பொழிந்தருளும். எங்கள் மீட்புக்கு எதிரானத் தடைகளைச் சகித்து, எங்களது சிலுவையை சுமந்து உம்மைப் பின்செல்ல உமது வலிமையின் ஆவியைப் பொழிந்தருளும். கடவுளை அறிய, எங்களை அறிய, புனிதர்களின் வழியைப் பின்பற்றி முழுமை அடைய உமது அறிவின் ஆவியைப் பொழிந்தருளும். கடவுளுக்கு செய்யும் சேவையில் இனிமையும் மகிழ்ச்சியும் அடைய உமது பக்தியின் ஆவியைப் பொழிந்தருளும். நாங்கள் கடவுளிடம் அன்பான பயபக்தி கொண்டு, கடவுளை வருத்தப்படுத்தும் எந்தச் செயலையும் செய்யமலிருக்க உமது தேவபயத்தின் ஆவியைப் பொழிந்தருளும். ஆண்டவரே உமது உண்மைச் சீடர்களின் அடையாளத்தால் எங்களை முத்திரையிட்டு, உமது ஆவியால் எங்களை வழிநடத்தியருளும். ஆமென்.


 செபம்:

முத: என்றென்றும் வாழும் இறைத் தந்தையே!

எல்: உம்மை ஆராதிக்கிறோம், எங்களை ஆசீர்வதியும்.

முத: என்றென்றும் வாழும் இறை மகனே!

எல்: உம்மை ஆராதிக்கிறோம், எங்களை ஆசீர்வதியும்.

முத: என்றென்றும் வாழும் இறை ஆவியே!

எல்: உம்மை ஆராதிக்கிறோம், எங்களை ஆசீர்வதியும்.

முத: மூவொரு கடவுளாகிய எங்கள் இறைவா!

எல்: உம்மை ஆராதிக்கிறோம், எங்களை ஆசீர்வதியும்.

முத: எம்மைப் படைத்தத் தூய தந்தையே!

எல்: உமக்கு நன்றி கூறுகின்றோம்.

முத: எம்மைப் மீட்டத் திரு மகனே!

எல்: உமக்கு நன்றி கூறுகின்றோம்.

முத: எம்மைத் தூய்மைப்படுத்தும் தூய ஆவியே!

எல்: உமக்கு நன்றி கூறுகின்றோம்.

முத: தூய ஆவியே என்றும், வற்றாத இறை அன்பே!

எல்: உம்மை வணங்கி ஆராதிக்கிறோம்.

முத: தூய ஆவியாரின் பத்தினியாகிய தூய கன்னி மரியாவே!

எல்: எங்கள் ஆன்மாவைத் தூய ஆவியாரின் இல்லமாக்க பரிந்துரை செய்தருளும்.

முத: செபிப்போமாக, நிறையுள்ளவராகிய எங்கள் வானகத் தந்தையே! பனி போலத் தூய ஆவியாரை எங்கள் இதயத்தின் ஆழத்தில் இறங்கி வரச் செய்து எங்களைத் தூயவராக்கி, எங்கள் ஆன்மா வளம் பெறச் செய்தருள்வீராக.

எல்: ஆமென்.